‘இதுவரை பார்த்த சூர்யா வேறு… இனி பார்க்க போகும் சூர்யா’ ; கோவையில் ரசிர்கள் ஓட்டிய போஸ்டர் வைரல்!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 12:41 pm

கோவையில் நடிகர் சூர்யா ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் சூர்யா மும்பையில் இருந்துகொண்டு படப்பிடிப்பில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற பெயரில் 10 மொழிகளில் திரைப்படம் தயாராகி வருகிறது.

3d தொழில்நுட்பத்தின் உதவியோடு இத் திரைப்படம் தயாராக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சூர்யா ரசிகர்கள் படத்தின் பெயர் வெளியிட்டதை தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேசமயம் போஸ்டரில், “இதுவரை தமிழகம் பார்த்த சூர்யா, வேறு இனி தமிழகம் பார்க்க போகும் சூர்யா கங்குவா, மோத நினைப்பவன் யோசிச்சு வா.. ஏண்ணா எதிரில் நிற்பவர் கங்குவா, எத்தனை பாகுபலி வந்தாலும்..RRR வந்தாலும்.. எங்கள் கங்குவாவை வெல்ல முடியாது,” உள்ளிட்ட வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!