தமிழ்நாடு பாஜக ஒரு பூஜ்ஜியம் என்பது நிரூபணம்-அண்ணாமலையை வறுத்தெடுத்த எஸ் வி சேகர்..!

Author: Vignesh
5 June 2024, 6:09 pm
SV seker
Quick Share

வேலூர் சி.எம்.சி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகனை சந்தித்த பின்னர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான எஸ்.வி சேகர் பேட்டி கொடுத்துள்ளார்.

முன்னால் மத்திய அமைச்சரும் மு.க.ஸ்டாலினின் சகோதருமான மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலக் குறைவு காரணமாக உயர் ரக மருத்துவச் சிகிச்சை மற்றும் பிசியோதெரப்பிக்காக வேலூரில் உள்ள சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் கடந்த 14.03.2024 முதல் அனுமதிப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று திரைப்பட நடிகரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.வி.சேகர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

பின்னர் எஸ்.வி சேகர் செய்தியாளர்களை சந்தித்துகூறுகையில்,

என்னுடைய நண்பர் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரைதயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தேன். நல்ல முறையில் சிகிச்சை அவருக்கு அளித்துள்ளனர். கடவுள் அருளால் அவர் மீண்டு நல்லமுறையில் வருவார். அண்ணாமலை தோல்வி என்பது அவராலேயே வந்தது. அவர் கடப்பாரை எடுத்து அவரே குத்திகொண்டார். 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை. கலைஞர் 101 ஆவது பிறந்த நாள் பெரிய அளவில் கொண்டாடும் வகையில் முடிவுகள் வந்துள்ளது.

தேர்தலில் கூட்டணியை கலையாமல் சிந்தாமல் சிதறாமல் ஸ்டாலின் பார்த்துகொண்டார். 40 – 40 இடங்களில் திமுக கூட்டணி ஜெயித்துள்ளது. இந்திய கூட்டணி அதிக இடங்களில் வெல்ல காரணம் திட்டமிடலும் ஸ்டாலினின் உழைப்பும் தான். அண்ணாமலை தலைமையில் பாஜக பூஜியத்தை அடைந்துள்ளனர். நான் சோவின் மானசீக சீடன் என்னால் எந்தகுதிரை ஓடும் ஓடாது என சொல்ல முடியும்.

அப்போதே பாஜக குதிரை குப்புற கவிழ்ந்தது. பாஜகவின் எதிர்காலம் அன்றே தெரிவித்துள்ளது. பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை அசிங்கம் மூன்றாவது முறையாக ஒரு சீட்டு கூட ஜெயிக்கவில்லை மாநில தலைவர் செய்துள்ளார். என்றால், வெட்கபட வேண்டிய விஷயம். மீண்டும் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் மீண்டும் பாஜக 2 சதவிகிதமாக ஓட்டை பெறும். 14 சதவிகிதம் என்பது பாஜக கூட்டணியால் வந்த வாக்கு தான் 13 இடங்களில் பாஜக டெபாசிட் இழந்தது.

தர்மபுரியில் சௌமியா அன்புமணி குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அதே போல, விஜயகாந்த் மகனும் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார். இதை பாஜக சரி செய்துகொண்டால் திருந்த வாய்ப்புள்ளது. பத்திரிகையாளர் சுதந்திர கோட்டை தாண்ட கூடாது. நாட்டில் சகிப்புதன்மை குறைந்துவிட்டது. நான் பாஜகவில் சேர்ந்த போது பாஜகவில் தேர்தலில் நிற்கமாட்டேன் என சொல்வதும் நானே இருக்கிறேன் என சொல்லும் அண்ணாமலைக்கு நீ இல்லை காலி என மக்கள் சொல்லிவிட்டார்கள். கடவுள் அருள் இருக்கும் வரையில் நமக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கூறினார்.

Views: - 134

0

0