உதவி செய்ய தயார்.. சிகரம் தொட்ட சின்னத்துரைக்கு பரிசு கொடுத்து கட்டியணைத்த நடிகர் தாடி பாலாஜி..(VIDEO)!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2024, 9:43 pm

உதவி செய்ய தயார்.. சிகரம் தொட்ட சின்னத்துரைக்கு பரிசு கொடுத்து கட்டியணைத்த நடிகர் தாடி பாலாஜி..(VIDEO)!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை காரணமாக அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6ஆம் தேதி வெளியானது. அதில் கொடூர தாக்குதலுக்கு ஆளான மாணவர் சின்னதுரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 469 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார்.

இந்தத் தேர்வில் அவர், தமிழ் – 71, ஆங்கிலம் – 93, பொருளியல் – 42, வணிகவியல் – 84, கணக்குப்பதிவியில் – 85, கணினி அறிவியல் – 94 என மொத்தம் 469 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார். மேலும் பலரும் சின்னதுரைக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: ராகுலுக்கு அல்வா கொடுத்த கமல்! காங். அழைத்தால் பிரச்சாரம்!

இதையடுத்து நடிகர் தாடி பாலாஜி நெல்லைக்கு நேரில் சென்று மாணவர் சின்னதுரை மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து பாராட்டினார்..

மேலும் சின்னதுரைக்கு புதிய ஆடையை பரிசாக வழங்கி எந்த உதவி வேண்டுமானாலும் கேள் செய்து கொடுக்கிறேன் என கூறி விட்டு சென்றார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 486

    0

    0