எங்க அம்மா இந்த ஒரு விஷயத்தை செய்துட்டு தான் போனாங்க ; தாய் இறப்பு குறித்து கண்கலங்கிய நடிகர் வடிவேலு!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 1:59 pm

யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் முடிந்தவுடன் எனது தாய் காலமாகி உள்ளதாக நடிகர் வடிவேல் சோகத்துடன் தெரிவித்தார்.

மதுரை விரகனூர் பகுதியில் திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேலு அவர்களின் தாயார் சரோஜினி வசித்து வந்தார். இவருக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை அப்போலோ மருத்துவமனையில் நேற்று வரை சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக சரோஜினி காலமானார்.

இந்த நிலையில், பல்வேறு திரை பிரபலங்கள் வடிவேலு தாயார் இறப்பிற்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தன்னுடைய இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார்.

மேலும், பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தாயின் இறப்பு குறித்து நடிகர் வடிவேலு கூறும் போது :-எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார்.அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்கலை நல்லபடியாக மாடு, ஆடுகளுடன் கொண்டாடிவிட்டு வரும்படி தற்பொழுது மறைந்திருக்கிறார்.

விக்கிப்பீடியாவில் தவறான தகவல் உள்ளது. எனவே அதனை அழித்து விடுங்கள், என்றும் மிகுந்த சோகத்துடன் நடிகர் வடிவேலு தெரிவித்தார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 549

    0

    0