பண்ணாரி அம்மன் கோவிலில் நடிகர் வடிவேலு சாமி தரிசனம் : செல்பி எடுக்க குவிந்த பக்தர்கள்..!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 March 2022, 2:38 pm

ஈரோடு : சத்தியமங்கலம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் திருக்கோவில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த ஆண்டு குண்டம் திருவிழா வரும் 21,22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நடிகர் வடிவேலு எளிமையான முறையில் வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்த கோவில் ஊழியர்கள் நடிகர் வடிவேலு அவர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

நடிகர் வடிவேலு வந்ததை அறிந்த கோவிலில் இருந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். மேலும் வடிவேலுவுடன் செல்பி எடுத்துக் கொண்டனர்.

  • ajith kumar and sivakarthikeyan on csk vs srh match அங்க Focus பண்ணுங்க: மைதானத்தில் திடீரென தோன்றிய அஜித்-சிவகார்த்திகேயன்; நம்பவே முடியலையே!