2024 நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டி? விரைவில் மதுரையில் மாநாடு? அரசியலில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 May 2023, 2:39 pm

நடிகர் விஜய் எம்.பி.தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிடுகிறாரா? என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தனது ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றி, ஏழை எளிய மக்களுக்கு அதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.

விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது புரியாத புதிராகவே உள்ள நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு 2024 பாராளுமன்றமே 2028ன் சட்டமன்றமே என்ற வாசகங்களுடன் விரைவில் மதுரையில் மாநாடு என்று மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சரா்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொடர்ந்து அரசியல் நுழைவு குறித்து ஆலோசனை நடத்துவது குறிப்பிடத்தக்கது

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 427

    0

    0