நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்க திட்டமா…? ரசிகர்களுடன் மீண்டும் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை..!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 10:04 pm

நாடாளுமன்றத் தேர்தல் வரப்போற நிலையில், விலையில்லா விருந்தகம் நடத்தும் விஜய் ரசிகர்களுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சி தலைவர்கள் அவரவர் கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற போவதாக சமூகத்தில் தொடர்ச்சியாக பேச்சுகள் தொடர்ந்து வந்த நிலையில், நடிகர் விஜய் தொடர்ந்து அரசியல் குறித்தான ஆலோசனைகளை தன் ரசிகர்களுக்கு தொடர்ந்து புகட்டி வருகிறார்.

நடிகர் விஜய் ரசிகர்கள் ரத்த தானம் விலையில்லா விருந்தகம் ரொட்டி பால் திட்டம் என பல்வேறு நலத் திட்டத்தில் தொடர்ந்து செயல் வீரர்களாக களம் கண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று சென்னை அடுத்த கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் விலையில்லா விருந்தகம் நடத்தும் ரசிகர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி அவர்களை பாராட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் அது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடனும் முக்கிய ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய் அரசியலில் கால் தடம் பதிக்க போகிறாரா என அரசியல் வட்டாரத்தில் ஒரு பரபரப்பான சூழலில் காணப்படுகிறது.

  • again ajith join with adhik ravichandran in ak 64AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!
  • Close menu