தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தன் அப்பா எஸ்ஏ சந்திர சேகரின் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார். ஆரம்பதி பல கேலி,கிண்டலுக்கு ஆளான விஜய் கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மெருகேற்றி திறமைகளை வளர்த்துக்கொண்டு தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இடத்தை பிடித்தார். குறிப்பாக இவரது நடிப்பு, கியூட்டான எக்ஸ்பிரஷன்ஸ், டான்ஸ் உள்ளிட்டவை ரசிகர்களை உற்சாகப்படுத்தும்.
விஜய்யின் அரசியல் தாக்கம்:
நடிப்பை தாண்டி விஜய் அரசியலில் சாதிக்க வேண்டும் என அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் பெரிதும் விரும்பினார். அதற்காக எஸ்.ஏ.சி ரசிகர் மன்றம் துவங்கினார். 90களின் ஆரம்ப காலங்களில் விஜய் நடிக்கத் தொடங்கிய நாளில் இருந்தே ரசிகர் மன்ற கொடியேற்றுவது, கொண்டாட்டங்கள் நடத்துவது என அனைத்தும் நடந்து கொண்டிருந்தது. அதற்கு தலைவராக இருந்தவரும் எஸ்.ஏ.சந்திரசேகர்தான்.
2009ஆம் ஆண்டு விஜய் ரசிகர் மன்றம், விஜய் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்டது. இதில் மக்களுக்கு சேவை செய்தல், நலத்திட்டங்கள் வழங்குதல் உள்ளிட்ட நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது . அதையும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தான் செய்தார். விஜய் மக்கள் இயக்கத்தின் முழு கட்டுப்பாடுமே எஸ்.ஏ.சி கையில்தான் இருந்தது. ஆனால் நடிகர் விஜய் இதுகுறித்து வெளிப்படையாக ஏதும் பேசியது இல்லை.
விஜய் மக்கள் இயக்கம் கலைந்தது ஏன்?
பின்னர் கடந்த 2020 ஆம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கதை அரசியல் கட்சியாக பதிவு செய்ய அதன் தலைவர் எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். இது விஜய் ரசிகர்களை கொண்டாட வைத்தது. முழுமையாக அரசியலில் குதித்துவிட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் திடீரென விஜய் தலையிட்டு இதற்கும் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என விளக்கினார்.
மீண்டும் விஜய் அரசியல் பிரவேசம்:
பின்னர் தற்போது மீண்டும் விஜய் தரப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் வாசம் அடிக்கிறது. ஆம், அண்மையில் கூட அம்பேதகர் பிறந்தநாள் அன்று அவருடைய சிலைக்கு தன்னுடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் மூலம் மாலை அணிவித்தார். இந்நிலையில் தற்போது, +2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை நேரில் அழைத்து பரிசுத்தொகை வழங்க உள்ளார் நடிகர் விஜய் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதற்காக மாவட்டம் தோறும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் நகல், ‘ஆதார்’ அட்டை நகல், மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்கு அட்டை நகல் மற்றும் மொபைல் எண் ஆகியவற்றையும் சேகரித்து, வரும் 20ம் தேதிக்குள், சென்னை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
12ம் வகுப்பு மாணவர்களை தொடர்ந்து , 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின், அவர்களின் விபரங்களையும் திரட்டி, வரும் 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி, அடுத்த மாதம், சென்னை அல்லது திருச்சியில் நடத்தப்பட உள்ளதாகவும் அதில்விஜய் மாணவ – மாணவியருக்கு, தன் கையால் உதவித் தொகைகளை வழங்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அவர் அரசியலில் முழு வீச்சில் இறங்கிவிட்டார் என்பது உறுதியாக கூறலாம்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.