நடிகர் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார்… ஆனா ஒரே ஒரு கண்டிஷன் : கி. வீரமணி பரபரப்பு அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan4 February 2024, 3:47 pm
நடிகர் விஜய் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார்… ஆனா ஒரே ஒரு கண்டிஷன் : கி. வீரமணி பரபரப்பு அறிவிப்பு!!
மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட மதிவாணன்- கெளசல்யா ஆகியோரின் திருமணத்தை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி நடத்தி வைத்தார். உறுதிமொழி வாசிக்க இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்து புத்தகங்களை பரிசாக வழங்கினார்.
தொடர்ந்து கி.வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
இந்தியா கூட்டணி உடைந்தது என்று கூறுவது போலித்தனமானது.. இந்தியா கூட்டணி உடையவில்லை. இந்தியா கூட்டணி உடைந்ததாக மாயப்பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
வேற்றுமையில் ஒற்றுமை காட்டுவதே இந்திய கூட்டணி. இந்தியா கூட்டணி உடைந்தது என்ற போலித்தனமான பிரச்சாரம் செய்கின்றனர். அது போன்று எதுவும் இல்லை. இது பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டு கிளம்பும் பொய்ப்பிரச்சாரம்.
மோடி தான் வருவார் மோடி தான் வருவார் என்று ஊடகங்கள் மூலமாக பாஜகவினர் கிளப்பி வருகின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லை.
இன்னமும் மணிப்பூர் செல்ல பிரதமர் மோடி தயாராக இல்லை. இந்திய கூட்டணியில் குழப்பம் என்பது திட்டமிட்ட பிரச்சாரம். உண்மையல்ல. இந்தியா கூட்டணி உடையவில்லை. உடையாது. வேற்றுமையின் ஒற்றுமை தான் இந்தியா கூட்டணி. அதில் கருத்து வேறுபாடுகள் உருவாகும்.
ஒரு மாநிலத்திற்கு மோடி சென்றால் வெற்றி கிடைக்கும் என்று சொல்வதெல்லாம் பொய். தற்போது அத்தாயாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே மக்கள் கடுங்கோபத்தில் உள்ளார்கள். வாக்களிப்பது மக்கள் தான் தலைவர்கள் அல்ல.
மீண்டும் மோடி ஆட்சி வராது. மோடி ஆட்சி வரும் என்பது திட்டமிட்ட பொய் பிரச்சாரம். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் க்கு இதுதான் கடைசி தேர்தல்.
விஜய் நல்ல நடிகர். தனிப்பட்ட முறையில் அவரை பற்றி எந்த கருத்தும் கூறமுடியாது. ஆனால் அவர் கட்சியின் கொள்கை என்று சொன்னால் தான் கருத்து சொல்ல முடியும். கட்சி என்பது அனைவரும் ஆரம்பிக்கலாம். முன்மொழிய ஒருவரும் வழிமொழிய ஒருவரும் இருந்தால் கட்சி ஆரம்பித்து விடலாம். அதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு.
நடிகர் விஜய் கட்சியின் கொள்கையை அறிவித்தால் அவரை ஆதரிப்பதா என்பதை பற்றி சொல்ல முடியும். பிரதமர் ஒவ்வொரு முறையும் தமிழகம் வரும்போது தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வாக்குகளை இழக்குகிறார் என்பது தான் நிதர்சனமான உண்மை.
தமிழக மக்கள் கொதித்துப் போய் உள்ளார்கள். மனித நேயம் இல்லாத பிரதமர் மோடி ராமேஸ்வரம் போனார். ஆனால் அருகில் வெள்ளத்தால் கடுமையாக பாதித்த மக்களை சந்திக்க இதுவரை போகவில்லை. இதுவரை தமிழகத்தில் புயலால் பாதித்த மக்களை சந்தித்து ஆறுதல் கூட சொல்ல விரும்பாத மோடி எப்படி தமிழகத்தில் வெற்றி பெற முடியும்.
இந்தியாவில் மணிப்பூர் மாநிலத்திற்கு எவ்வாறு மோடி செல்ல மறுத்தாரோ அதேபோல தான் தமிழகத்தில் புயலால் பாதித்த மக்களை இதுவரை மோடி பார்க்கவில்லை என தெரிவித்தார்.
0
0