ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கு லியோ பட டிக்கெட்டை வாங்கிய நபர்… சொன்ன காரணம்..? பாராட்டி விஜய் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
20 October 2023, 11:22 am

கோவில்பட்டியில் லியோ திரைப்படத்தின் முதல் காட்சி டிக்கெட் ஒன்று 1 லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குனர் லோகஸ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழகத்தில் நேற்று காலை 9 மணிக்கு வெளியாகியது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சத்தியபாமா, சண்முகா, லெட்சுமி என 3 திரையரங்குகளில் 7 ஸ்கீரின்களில் திரைப்படம் வெளியாகியது. திரையரங்குகள் முன்பு ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்து மேள தாளம் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் படத்திற்கு மாலை அணிவித்து, வண்ண வண்ண கலர் மத்தப்புகளால் படத்திற்கு காண்பித்தனர். டி.ஜே., வீலிங் என்று அசத்திய ரசிகர்கள், விஜய் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து அசத்தினர்.

இந்த நிலையில், இந்த காட்சியின் முதல் டிக்கெட்டை கோவில்பட்டி சென்ட்ரல் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் செல்வின் சுந்தர் என்பவர் 1 லட்சத்து 10 ஆயிரத்து ஒரு ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்று வரும் இலவச கல்வி பயிலகத்திற்கு வழங்கும் வகையில், இவ்வளவு விலை கொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதனை விஜய் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 463

    0

    0