‘விஜய்யே தேவையில்லை’ என முடிவெடுத்த ரசிகர்கள்… பதறிபோன விஜய்… உடனே ‘வாரிசு’ படப்பிடிப்பு தளத்தில் பக்காவா போட்ட பிளான்..!

Author: Vignesh
28 September 2022, 1:40 pm

பீஸ்ட் படத்தின் ரிலீசுக்கு முன்பாகவே தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில்’ தளபதி 66′ படத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்தப்படத்தில் விஜய்யின் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் ‘வாரிசு’ தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு குடும்ப சென்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார் விஜய்.

‘வாரிசு’ படத்தினை தில் ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்த நிலையில் தற்போது எண்ணூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஏராளமானோர் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குவிய தொடங்கினர்.

அப்போது விஜய்யை பார்க்க முற்பட்ட போது, போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், நாங்கள் இவ்வளவு பண்றது எதுக்கு, எங்க தளபதியை பார்க்க தானே. இப்படி பண்ணா எங்களுக்கு தளபதியே தேவையில்லை. சூர்யா, ரஜினி வந்த மட்டும் அவரது ரசிகர்களை பார்க்க அனுமதிக்கிறாங்க. ஆனால் விஜய் வந்தா மட்டும் இப்படி பண்றாங்க என தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், நேற்று ஷுட்டிங் முடிந்து விஜய் வீட்டுக்கு செல்லும்போது, ரசிகர்கள் ஏராளமானோர் விஜயை பார்க்க காத்திருந்தனர். இதனையடுத்து விஜய் காரில் இருந்து இறங்கி ரசிகர்களைச் சந்தித்தார். இந்த போட்டோ, வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘வாரிசு’ படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தகது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ