விஜய் பிறந்தநாள்.. நாய்களுக்கு பிரியாணி விருந்து வைத்து கொண்டாடிய ரசிகர்கள்..!

Author: Vignesh
22 June 2024, 3:21 pm

மதுரையில் கைவிடப்பட்ட சமூக நாய்களுக்கு விருந்து வைத்து விஜயின் பிறந்த நாளை கொண்டாடிய விஜய் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் ஐம்பதாவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என விஜய் கோரிக்க வைத்தார்.

அதை ஏற்ற விஜய் ரசிகர்கள் பலர் கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் இறந்த குடும்பத்திற்கு உதவி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், மதுரை சேர்ந்த விஜய் ரசிகர்கள் மதுரை மாநகர் பகுதியில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சமூகத்தால் கைவிடப்பட்ட நாய்கள் மீட்கப்பட்டு பிபி குலம் பகுதியில் செயல்பட்டு வரும் சிறிய காப்பகத்தில் உள்ள நாய்களுக்கு விருந்து வைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி நாய்களுக்கு பிரியாணி செய்ய திட்டமிடப்பட்டு அங்குள்ள ஒருங்கிணைப்பாளர் மூலம் பிரியாணி செய்யப்பட்டு கைவிடப்பட்ட சமூக நாய்களுக்கு விருந்து வைத்த சம்பவம் நெகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

  • Keerthy Suresh new glamorous look தாலியுடன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 365

    0

    0