நயன்தாராவுக்கு வில்லனாக மாறும் விஜய் சேதுபதி ? எந்த படத்தில் தெரியுமா.?

Author: Rajesh
5 July 2022, 6:56 pm

பெரிய பிரபலங்கள் படத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், பீஸ்சா, நானும் ரவுடி தான், இமைக்கா நொடிகள் போன்ற பல திரைப்படங்களில் மக்களை ஈர்க்கும் கதையில் பிடித்தமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் ஆகி, தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் மக்கள் செல்வனாக உருவாகியுள்ளார்..

எந்த விதமான கதைகளிலும் தயக்கம் காட்டாது நடித்து வரும் விஜய் சேதுபதி, இவர் நடிக்கும் முக்கால்வாசி திரைப்படங்கள் வெற்றி படங்களாகவே அமைந்து விடுகிறது. தற்போது, 2 ஹீரோ சப்ஜெக்டிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர்,மேலும், தற்போது வெளியாகி வேற லெவல் மாஸ் காட்டி வரும் விக்ரம் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்ததது என கெத்து காட்டி வருகிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் 2 பெரிய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்த விஜய் சேதுபதி, விக்ரம் படத்தில் சந்தானம் என்ற போதை கடத்தல் ஏஜண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் திரைப்படத்தில் நடித்து அப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அனைத்து திரையுலகிலும் பான் இந்திய நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர், நயன்தாரா, அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ரெடியாகி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் குறித்து புதிய தகவல் ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது அதாவது விஜய் சேதுபதி இந்த படத்தில் இணைவது குறித்த செய்தி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • Laika Productions exits Jason Sanjay film விஜய் அரசியலால் ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பில் சிக்கல்..லைக்கா எடுக்கப்போகும் அதிரடி முடிவு.!
  • Copyright © 2025 Updatenews360
    Close menu