வாங்க, எப்படி இருக்கீங்க.? திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த நடிகர் விஜய் : வைரல் Photos!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2022, 9:25 pm

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட். தற்போது இந்நிறுவனத்தை கல்பாத்தி அகோரம் நிர்வகித்து வருகிறார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம், மாற்றான், தனி ஒருவன், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. கடைசியாக கல்பாத்தி அகோரம், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான ‘பிகில்’ திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்திருந்தார்.

இன்று கல்பாத்தி அகோரமின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

Image

மேலும், இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், நடிகர் விஜய்யும் வணக்கம் சொல்லி பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். நலம் விசாரித்த உடன் புன்னகைத்த முதலமைச்சர், திருப்பி விஜயை பார்த்து நலம் விசார்த்தார்.

Image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் விஜய் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.

Image
  • Samantha dating Raj Nidimoru அந்த இயக்குனருடன் நடிகை சமந்தா டேட்டிங்…வெளிவந்த புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்..!