‘எதற்கும் துணிந்தவன்’ வில்லன் நடிகருக்கு விரைவில் டும் டும் டும்: நீண்டநாள் காதலியான பிரபல தமிழ் நடிகையை கரம்பிடிக்கிறார்?
Author: Rajesh5 April 2022, 7:30 pm
தமிழ் திரையுலகில் தற்போது பட்டையை கிளப்பி வரும் வில்லன்களில் ஒருவர் நடிகர் வினய். இவர் சிவகார்த்திகேயனின் டாக்டர், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஷாலின் துப்பறிவாயன் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.
நடிகர் வினய் முதன் முதலில் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கி இருந்தாலும், தற்போது வில்லன் கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், 38 வயதாகும் நடிகர் வினய்க்கு விரைவில் 40 வயது நடிகையுடன் திருமணம் நடைபெறவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இவருக்கும் நடிகை விமலா ராமனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக காதல் இருந்து வந்தது என்றும் விரைவில் திருமணம் செய்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. வினய்-விமலா ராமன் காதலுக்கு இருதரப்பு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து விரைவில் திருமண தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராமன் தேடிய சீதை உள்பட ஒரு சில தமிழ் படத்திலும், பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை விமலா ராமன்.