பெரும்பாலான படங்களை ரெட் ஜெயண்ட் நிறுவனமே வெளியிட இதுதான் காரணம்..? உண்மையை போட்டுடைத்த நடிகர் விஷ்ணு விஷால்..!!

Author: Babu Lakshmanan
24 November 2022, 8:38 am

கோவை ; தமிழ் படங்களை சில மொழி நிறுவனங்கள் வெளியிடுவதில் சில நெருக்கடிகளை கொடுப்பதுக்கு பின்னால் பெரிய அரசியல் இருக்கலாம் என கருதுவதாக நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ள ‘கட்டா குஷ்டி’ திரைப்படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் தொடர்பாக அப்படக்குழுவினர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் விஷ்ணு விஷால் சுவாரசிய நிகழ்வுகள் குறித்தும் படத்தின் மையக் கருத்து குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். ஆணும், பெண்ணும் சமம் மற்றும் கணவன் மனைவி இடையே ego நிகழும் கருத்து வேறுபாடுகள் தொடர்பாக இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் எனவும், தென்னிந்திய படங்கள் தற்போது பாலிவுட் படங்களை விட அதிக அளவில் இந்திய அளவில் பேசப்படுகிறது என கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது :- திரைப்படங்களில் மக்கள் தற்போது அதிக அளவில் கண்டெண்ட் எதிர்பார்க்கிறார்கள். திரைப்படங்களின் மீதான மக்கள் பார்வையும் எதிர்பார்ப்புகளும் அறிவுப்பூர்வமாக அதிக அளவில் வளர்ந்துள்ளன. தொடர்ந்து தமிழ் படங்களுக்கு மற்ற திரை உலகினர் மத்தியில் காட்டப்படும் வரவேற்பிற்கு பின்னால் சில அரசியல் இருப்பதாக கருதுகிறேன், எனக் கூறினார்.

மேலும் சமீபத்தில் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கவர்ச்சியான புகைப்படங்கள் குறித்து பேசும்போது, அந்த புகைப்படங்களை வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இயக்குனர்கள் கதை எழுதும்போது, நானும் அதற்கு பொருந்துவேன் என நினைக்கும் வகையிலும், fitness தொடர்பாகவும் மட்டுமே வெளியிட்டதாக கூறினார்.

மேலும், ரன்வீர் சிங் புகைப்படம் எடுத்து வெளியிடும் முன்னரே இந்த புகைப்படங்களை தன் மனைவி எடுத்து வைத்து விட்டதாகவும், உடலை கட்டுருதியாக பேணுவதை பெண்கள் சமூக வலைதளங்களில் இடும்போது பாராட்டுபவர்கள், ஆண்கள் வெளியிடும் போது அவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதில்லை என தெரிவித்தார்.

தொடர்ந்து ரெட் ஜெயண்ட் நிறுவனமே அனைத்து திரைப்படங்களையும் வெளியிடுகின்றனவா என எழுப்பப் பட்ட கேள்விக்கு, “நாங்கள் கேட்பதால்தான் அவர்கள் முன்வந்து வெளியிடுகிறார்கள். எனது படங்களுக்கு சிக்கல் வந்த போதும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். ஆட்சியில் இல்லாத போதும் சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை எனக்காக அவர்கள் வெளியிட்டு கொடுத்திருந்தார்கள். எனவே அனைத்து திரைப்படங்களையும் ரெட்ஜெயண்ட் கட்டாயப்படுத்தி வாங்கி வெளியிடுகிறார்கள் என்பதில் உண்மை இல்லை,” என்றார்.

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தமிழ் திரைப்படங்களை தயாரித்து வழங்குகிறாரா அது தொடர்பாக விருப்பப்பட்ட கேள்விக்கு படம் குறித்து, சமூக வலைதளங்களில் இதை போன்று படித்தேன் எனவும், அவர் அவ்வாறு தமிழ் திரையுலகில் தனது புதிய முயற்சிகளை எடுத்தால் அது வரவேற்கத்தக்கது தான் என்றும், தமிழகத்திற்கும் அவருக்கும் இடையிலான உறவு அனைவரும் அறிந்ததே என தெரிவித்தார்.

மேலும் படங்கள் மீது உதயநிதி ஆர்வம் கொண்டவர் என்பதும், அவர் சினிமாவை காதலிப்பவர் நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்தார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ