NUDE தான் இப்ப TREND : அரை நிர்வாணப் போட்டோவை வெளியிட்ட பிரபல தமிழ் நடிகர்! விமர்ச்சிக்கும் நெட்டிசன்கள்..!
Author: Rajesh23 July 2022, 6:27 pm
முன்னணி நடிகர்களில் ஒருவராக அந்தஸ்தை அடைய போராடி வரும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவருக்கு, 2018ம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
பலே பாண்டியா, துரோகி, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். முண்டாசுப்பட்டி, ஜீவா, இன்று நேற்று நாளை, ராச்சசன் போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் அங்கீகாரத்தையே தமிழ் சினிமாவில் பெற்று தந்தது. நீர்ப்பறவை படத்திற்காக சிறந்த நடிகருக்கான சைமா விருதுகளை வென்றார்.
இறுதியாக, இவர் நடிப்பில் FIR திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இந்த படத்தை மனு ஆனந்த் என்பவர் இயக்கி இருந்தார். இதில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் உள்ளிட்டோர் முக்கிய இடங்களில் நடித்திருந்தனர்.
தற்போது மோகன்தாஸ் என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இடையே குடும்ப சிக்கல்களிலும் மாட்டிய விஷ்ணு விஷால், முன்னாள் மனைவி ரஜினி நடராஜன் என்பவரை விவாகரத்து செய்த பிறகு ஜவாலா குட்டா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் இவர் பாலிவுட் நடிகர் போன்று நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்தை தனது மனைவி எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். முன்னதாக பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பிரபல பத்திரிக்கையின் அட்டை பக்கத்திற்காக நிர்வாண போஸ் கொடுத்திருந்தது பெரும் சர்ச்சைகளை கிளப்பு இருந்த நிலையில், தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தற்போது பாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு நிர்வாண புகைப்படம் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.