காதலர் தினத்தில் பிரபல நடிகையுடன் பழனிக்கு வந்த நடிகர் : புகைப்படம் எடுக்க குவிந்த கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 12:46 pm

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர்.

அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு சினிமா நடிகர் கௌதம் கார்த்திக் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். கௌதம் கார்த்திக் மனைவியும் சினிமா நடிகையுமான மஞ்சிமா மோகன் உடன் வருகை தந்தார்.

மலையடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலமாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சாமி தரிசனம் செய்ய மலை மீது சென்றனர்.

மலை மீது சென்ற கௌதம் கார்த்திக்கை பார்த்து பக்தர்கள் பலரும் புகைப்படம் எடுக்க திரண்டனர். இந்த நிலையில் விரைவாக சாமி தரிசனம் செய்ய கௌதம் கார்த்திக் அழைத்து செல்லப்பட்டார்.


பின்னர் கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்டு மலைமீது இருந்து கீழே இறங்கி புறப்பட்டுச் சென்றார். பழனி முருகன் கோயில் குடமுழுக்கு நிறைவடைந்த பிறகு அடுத்தடுத்து சினிமா நடிகர்கள் வருகை அதிகரிக்க துவங்கியுள்ளது.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!