பழனி முருகன் கோவிலுக்கு வந்த நடிகர் யோகி பாபு… தகவலை கேட்டு செல்பி எடுக்க கூடிய கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 6:33 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு இன்று நடிகர் யோகி பாபு வருகை தந்தார். ரோப் கார் மூலமாக சென்ற அவர் முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.

பின்னர் போகர் சமாதியில் வழிபட்டு விட்டு பின்னர் மலை அடிவாரத்திற்கு வந்த நடிகர் யோகி பாபு ,திரு ஆவினன்குடி கோவிலிலும் சாமி தரிசனம் செய்தார் .

பின்னர் அங்கு இருந்த வெள்ளி கடையில் அவருக்கு தேவையான பொருட்களை வாங்கினார். இதனை அறிந்த அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் புகைப்படம் எடுக்க சூழ்ந்து கொண்ட நிலையில் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டனர். பின்னர் கார் வந்தவுடன் காரில் ஏறிச் புறப்பட்டு சென்றார்.

  • Dragon Movie Release in OTT Date Announced வசூலில் மிரட்டிய டிராகன் ஓடிடியில் ரிலீஸ்… தேதி அறிவிப்பு!