தெலுங்கு மக்களே.. சிறையில் இருந்து வந்ததும் கஸ்தூரியின் முதல் பேச்சு!

Author: Hariharasudhan
21 November 2024, 6:47 pm

ஆந்திரா, தெலுங்கானா மக்களுக்கு மிகப்பெரிய நன்றி என சிறையில் இருந்து வெளியே வந்த நடிகை கஸ்தூரி தெரிவித்தார்.

சென்னை: பிராமணர் உள்பட அனைத்து சமுதாய மக்களுக்கும் பிசிஆர் எனப்படும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தேவை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த நவம்பர் 3ஆம் தேதி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டடு. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைப்பட நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் அவர் பேசும்போது, தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்துகளை தெரிவித்து இருந்தார். இதற்கு மாநிலம் முழுவதும் தெலுங்கு அமைப்புகள் மற்றும் தெலுங்கு பேசும் மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து இருந்தனர். மேலும், இது தொடர்பாக புகார்களும் அளிக்கப்பட்டன.

குறிப்பாக, தெலுங்கு நாயுடு சம்மேளனம் அளித்த புகாரின் பேரில், சென்னை எழும்பூர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அவருக்கு சம்மன் அளிக்கச் சென்றபோது அவரது வீடு பூட்டப்பட்டு இருந்ததால், அவர் தலைமறைவானதாக தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

அப்போது, முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. இதனையடுத்து, தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் வீட்டில் இருந்த கஸ்தூரியை, தனிப்படை போலீசார் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

KASTHURI RELEASED FROM PUZHAL JAIL and meet press

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு நவம்பர் 29 வரை நீதிமன்றக் காவல் வழங்கிய நிலையில், புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, ஜாமீன் வழங்கக் கோரி கஸ்தூரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, ஆட்டிசம் பாதித்த தனது மகனை கவனிக்க வேண்டும் என கஸ்தூரி தரப்பிலும், ஜாமீன் வழங்குவதில் ஆட்சேபனை இல்லை என காவல்துறை தரப்பிலும் கூறப்பட்டது.

இதையும் படிங்க: போட்டுக்கொடுத்த புது அமைச்சர்.. பதறிய பழைய அமைச்சர்.. திமுகவில் நேரடி மோதல்?

இதனையடுத்து கஸ்தூரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், இன்று மாலை அவர் புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அங்கு அவரை அவரது ஆதரவாளர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய கஸ்தூரி, “அரசியல் வித்தியாசம் பாராமல், எனக்கு ஆதரவு தெரிவித்தவர்கள், தலைவர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. எனக்கு ஆதரவாக இருந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. சிறு குரலாக இருந்த என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி” என்றார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 105

    0

    0