பிரபல டாப் நடிகருக்கு ஜோடியாகும் ஷங்கரின் மகள்..! வெளியான புதிய பட அறிவிப்பு.!

Author: Rajesh
3 August 2022, 12:10 pm

இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் என்று சொன்னால் விரல்விட்டு எண்ணும் வகையில் சில இயக்குனர்கள் மிஞ்சுவார்கள். அதில் முக்கியமான இயக்குனர் என்று பார்த்தால் இயக்குனர் ஷங்கர். இவரின் படங்கள் தமிழைத் தாண்டி பல மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மேலும் இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அதிதி ஷங்கர் தமிழில் முதலில் நடிக்கும் திரைப்படம் விருமன். இயக்குனர் முத்தையா இயக்கியுள்ளார். நடிகை ஜோதிகாவும் சூர்யா 2D புரோடக்சன்ஸ் நிறுவனம் மூலம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தில் அதிதி சங்கர் ஒரு கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் . இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது . அதே போல் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘கஞ்சா பூவு கண்ணால ‘ என்ற பாடல் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது .

இந்நிலையில் தற்போது அதிதி ஷங்கரின் இரண்டாவது திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து உருவாகவுள்ள முக்கிய திரைப்படம் மாவீரன்.இப்படத்தில் நடிகை அதிதி ஷங்கர் தான் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1054

    3

    0