விளம்பர நடிகையை கூட்டு பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர் ; மதுபோதையில் நண்பர்களுடன் சேர்த்து சீரழித்த கொடுமை!!

Author: Babu Lakshmanan
4 January 2023, 8:31 am

திருவள்ளூர் : விளம்பர நடிகையை வீட்டிற்கு அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்கிய அதிர்ச்சி சம்பவம் திருவள்ளூரில் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த சீயஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் விஜய். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கும், காக்களுர் பைபாஸ் சாலையில் வசிக்கும் நகைக்கடை, துணிக்கடை உள்ளிட்ட சிறு சிறு உள்ளூர் விளம்பரங்களுக்கு நடிக்கும் 26 வயது திருமணமான விளம்பர நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தில் ஆட்டோ ஓட்டுனர் விஜய், விளம்பரம் மாடல் நடிகையை ஆசை வார்த்தைகளை கூறி சீயஞ்சேரியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே விஜய் வீட்டில் இருந்த சாம்ராஜ், சதீஷ் உள்ளிட்ட மூன்று நண்பர்களுக்கும் அந்த விளம்பர நடிகையை விருந்தாக்கியுள்ளார்.

மூன்று பேரும் சேர்ந்து இளம்பெண்ணை மது போதையில் சீரழித்தனர். இதையடுத்து, ஆசை தீர பாலியல் இச்சையை தீர்த்த பிறகு அவர்கள், அந்த நடிகையை அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளனர். தனக்கு நேர்ந்த இந்த கொடுமையை எண்ணி எண்ணி சொந்த போன விளம்பர மாடல் நடிகை, இது குறித்து புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன் பேரில் போலீசார் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுனர் விஜய், சாம்ராஜ், சதீஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஆள் யார்..? அவர் குணம் என்ன..? என்பதை தெரிந்து கொள்ளாமல், தவறான சகவாசத்தை நம்பும் இளம் நடிகைகளுக்கு, விளம்பர மாடல் அழகிக்கு நேர்ந்த சம்பவமே ஒரு எச்சரிக்கை மணியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!