திமுகவின் பொய் வாக்குறுதி… நம்பி ஓட்டு போட்ட மக்கள் ஏமாற்றம் ; தெலுங்கில் வாக்குசேகரித்த நடிகை கவுதமி!!!

Author: Babu Lakshmanan
10 April 2024, 1:44 pm

தெலுங்கு மொழியில் பேசி பொள்ளாச்சி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் .

வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனுக்கு ஆதரவாக பிரபல திரைப்பட நடிகை கவுதமி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் படிக்க: ஒரே நாளில் 106 அரசு ஊழியர்கள் சஸ்பெண்ட் : பாஜக கொடுத்த புகாரால் அதிரடி நடவடிக்கை!!

குறிப்பாக, மதுக்கரை மார்க்கெட், குளத்துப்பாளையம், ஆலாந்துறை, தென்னமநல்லூர், தேவராயபுரம் உள்ளிட்ட இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

ஆலாந்துறை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை கவுதமி பொதுமக்களிடம் “யுகாதி பண்டிகை” தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்களை தெரிவித்து, தொடர்ந்து தெலுங்கு மொழியில் வேட்பாளர் கார்த்திகேயனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என உரையாற்றினார்.

மேலும் படிக்க: திருமுருகன் காந்தி பிரச்சாரம்… மிரட்டல் விடுத்து தடுத்து நிறுத்திய பாஜகவினர் ; கோவையில் பரபரப்பு…

மேலும், திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த நாம், கடந்த ஐந்து ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருவதாகவும், மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பொள்ளாச்சி நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றியடைய செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம், இரட்டை இலைக்கே வாக்களிப்போம் என்று வெற்றி கோசத்தை எழுப்பி பொதுமக்களை உற்ச்சாகப்படுத்தினார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ