ICU-வில் மகன் ஏழு மணி நேர ஆப்ரேஷன் ‘உயிரோடு இருக்க மாட்டான்னு சொன்னாங்க’ கண் கலங்கிய கனிகா..!

Author: Vignesh
27 September 2022, 1:51 pm

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்தவர் நடிகை கனிகா. சென்னையில் நடைபெற்ற மிஸ் சென்னை என்ற போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றதால் சினிமாவில் நுழைய ஒரு காரணமாக இருந்துள்ளது.

2002-ம் ஆண்டு 5 ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவிற்கு குரல் கொடுத்ததே இவர்தானாம். சினிமாவில் இப்போது அவருக்கு வாய்ப்பு குறைய சீரியலில் நடிக்க வந்துள்ளார்.

தற்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடரில் கஸ்தூரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஷ்யாம் என்பவரை 2008ம் ஆண்டு திருமணம் செய்த நடிகைக்கு ரிஷி என்ற மகன் இருக்கிறார்.

என் மகன் பிறந்ததும் என்னிடம் காட்டவில்லை, குழந்தையில் இருதயத்தில் பிரச்சனை இருக்கிறது, இன்று இரவு வரை அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்று கூறினர். ICUவில் எனது மகனை பார்த்ததும் என மனம் இரண்டாக உடைந்தது. பின் 7 மணி நேர ஆபரேஷனுக்கு பிறகு என் மகனை பிழைக்க வைத்து விட்டார்கள்.

இன்று வரை எனது மகனை பத்திரமாக பார்த்து வருகிறேன் என தனது வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 608

    0

    0