நடிகை குஷ்புவுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 5:50 pm

தற்போது மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் புளூ வைரஸ் தொடர்பான நோய்களும் வேகமாக பரவி வருகின்றன.

இந்நிலையில் நடிகை குஷ்புவுக்கு கடந்த 2 நாட்களாகவே மிகக் கடுமையான உடல் வலியும், காய்ச்சலும் இருந்து வந்திருக்கிறது. இதற்கான மருந்து மாத்திரைகள் உட்கொண்டும் அவர் உடல் இயல்பு நிலைக்கு திரும்பாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பணி நிமித்தமாக ஹைதராபாத் சென்றிருந்த போது குஷ்புவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் அங்குள்ள அப்போலோ மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறார்.

அவருக்கான சிகிச்சைகளை தொடர்ந்து அளித்து வரும் மருத்துவர்கள் குழு ஓரிரு நாட்களில் குஷ்புவை டிஸ்சார்ஜ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள அவர், கடுமையான காய்ச்சல் மற்றும் உடல் வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன் என்றும் உங்கள் உடல் ஏதாவது சொன்னால் தயவு செய்து அதை நிராகரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தாம் காய்ச்சலில் இருந்து விரைந்து நலம் பெற்று வருவதாகவும் ஆனால் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நல்ல மருத்துவர்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ள குஷ்பு, புளூ காய்ச்சல் மோசமானது என பகிர்ந்துள்ளார்.

இதன் மூலம் குஷ்பு புளூ வைரஸ் காய்ச்சலால் தான் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதும் அவருக்கு கொரோனா தொற்று கிடையாது என்பது தெளிவாகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 379

    0

    0