வேளச்’சேரி’-ல தான் சேரி இருக்கு… பயந்து பின்வாங்கும் ஆள் நான் இல்ல… மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது ; நடிகை குஷ்பு திட்டவட்டம்…!!

Author: Babu Lakshmanan
25 November 2023, 2:25 pm

சேரி விவகாரத்தில் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பு திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.

நடிகை த்ரிஷா குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகானுக்கு நடிகை குஷ்பு X தளத்தில் கண்டனம் தெரிவித்து கருத்து பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவுக்கு கேள்வி எழுப்பிய திமுக ஆதரவாளர் ஒருவரின் பதிவுக்கு, “திமுக குண்டர்கள் இப்படியான மோசமான மொழியைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது இது தான். சாரி, என்னால் உங்களைப் போல சேரி மொழியில் பேச முடியாது” என பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப்பதிவு இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேரி என்ற வார்த்தை குறிப்பிட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். மேலும், இந்தக் கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு பேசியதாவது:- சேரி என்பதை நான் பகடியாக கூறினேன். அதற்கு பிரஞ்சு மொழியில் அழகு என்று அர்த்தம். எப்போதுமே என்னுடைய பதிவுகளில் பகடி இருக்கும். எனக்கு தெரிந்த மொழியில் தான் நான் பேச முடியும்.

நான் யாரையும் மரியாதை குறைவாக பேசவில்லை. பயந்து பின்வாங்கும் ஆள் நான் கிடையாது. சேரி என்று கூறியதற்காக நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும். அரசு பதிவுகளிலேயே சேரி என்ற வார்த்தை இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரி ஆகிய பெயர்களுக்கு என்ன சொல்வீர்கள்?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!