ஒரு படிக்கட்டை எடுத்தால் மட்டும் பிரச்சனை தீருமா..? இது அடிக்கடி நடக்குது… தட்டிக்கேட்டால் கைது பண்றாங்க ; நடிகை குஷ்பு ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
7 November 2023, 9:08 am

சென்னை ; இந்திய அணி கிரிக்கெட்டில் உலக கோப்பையைய் நிச்சயம் வெல்லும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் தனியார் துணிக்கடையை நடிகையும், பாஜகவின் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

பின்னர் நடிகை குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது :- இந்திய அணி கிரிக்கெட்டில் தனிப்பட்ட முறையில் பெயர் வர வேண்டும் என எந்த வீரரும் விளையாடவில்லை. நாட்டுக்காக விளையாடுறாங்க, கட்டாயம் வெற்றி வாய்ப்புகள் அதிகம். இந்திய அணி கண்டிப்பாக உலக கோப்பையை கைப்பற்றும்.

பேருந்து படிக்கட்டில் இருந்து கீழே விழாமல் மாணவர்கள் தப்பித்தனர். அதை பற்றி தாய்மார்கள் உட்பட யாரும் கேட்கல, ஆனால், ரஞ்சனா நாச்சியார் தட்டி கேட்டார். அதற்கு கைது பண்றீங்க. அதேபோல், புட்போர்டில் தொங்கி மாணவர்களின் உயிரிழப்பு என்பது அடிக்கடி நடக்குது.

ஆனால், தற்போது பஸ்ஸில் ஒரு படியா எடுத்துள்ளனர். அத மட்டும் செஞ்சா போதுமா..? அதற்கு என்ன அர்த்தம். சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்க மாட்றாங்க. ஒரு படிக்கட்டை எடுத்தால் மட்டும் பிரச்சனை தீருமா..? என கேள்வியும் எழுப்பினார். அரசியல் கேள்வி வேண்டாம், என தவிர்த்து விட்டார்.

  • Dragon Beat Vidaamuyarchi Movie Collection விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!