‘முதல் முதலாக ஒருவரை பார்த்து பொறாமை படுகின்றேன்’ : PS 1 பட நடிகையை பார்த்து பொறாமை படும் நடிகை .. ஏன் தெரியுமா ?

Author: Vignesh
30 September 2022, 9:08 am

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பல ஆண்டுகாலமாக பொன்னியின் செல்வன் கதையை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார் மணிரத்னம். அதற்காக விஜய், மகேஷ் பாபு என பல நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் எதுவும் கைகூடவில்லை.

இந்நிலையில் ஒருவழியாக அவரது முயற்சிக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.

ஆதியை கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்துள்ள இப்படத்தில் நந்தினியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் தமிழில் இப்படத்தின் மூலம் ரி என்ட்ரி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று வெளியாகும் பொன்னியின் செல்வன் படத்தை காண ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆவலாக இருக்கின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகை மீனா இப்படம் குறித்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருக்கிறார். உண்மையை சொல்ல போனால் ஐஸ்வர்யா ராயை பார்த்தல் எனக்கு பொறாமையாக உள்ளது.

என் வாழ்க்கையில் முதல் முதலாக ஒருவரை பார்த்து பொறாமை படுகின்றேன் என்றால் அது ஐஸ்வர்யா ராயை பார்த்து தான். ஏனென்றால் எனக்கு பொன்னியின் செல்வன் கதையிலே பிடித்த கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள நந்தினி கதாபாத்திரம் தான் என்றார் மீனா என்பது குறிப்பிடத்தக்கது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்