மீண்டும் இணைந்துள்ள ‘ராஜா ராணி’ கூட்டணி.. முதல் முறை இப்படியொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நயன்தாரா.!

Author: Rajesh
13 July 2022, 1:01 pm

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவரான நயன்தாரா கடைசியாக ஓடிடியில் வெளியான “O2” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில் தனது நீண்ட நாள் காதலரும், இயக்குநரான விக்னேஷ் சிவனை கடந்த மாதம் 9-ம் தேதி கரம் பிடித்தார்.

அதன்பின்பு சற்று இடைவெளி எடுத்துக்கொண்ட நயன்தாரா, தற்போது அட்லீயின் இயக்கத்தில், ஷாரூக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

நடிகை நயன்தாராவின் 75வது படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் லேடி சூப்பர் ஸ்டார் 75வது படம் எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது.

நிலேஷ் கிருஷ்ணா எனும் புதுமுக இயக்குனர் நயன்தாராவின் 75வது படத்தை இயக்கிறார். இவர், இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இதில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய் மற்றும் சத்யராஜ் நடிக்கவுள்ளார்கள்.

இதில் நடிகை நயன்தாரா செஃப் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.முதன் முதலாக நயன்தாரா இப்படத்தில் செஃப்பாக நடிக்கவுள்ளார். இதனால், இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • sv shekher shared the test movie poster and criticize it on his x platform என்னைய படத்தில் இருந்து தூக்கிட்டா இதான் கதி- நயன்தாரா படத்திற்கு எஸ்.வி.சேகர் விட்ட சாபம்…
  • Close menu