பெரிய கட்சியில் என்னை போட்டியிட அழைக்கிறார்கள்… விஜய்க்கு எதிராக நிற்பேன் : பவர் ஸ்டார் மீண்டும் பேச்சு!

Author: Udayachandran RadhaKrishnan
14 April 2025, 11:47 am

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு HRWF பவுண்டேஷன் என்ற தனியார் அறக்கட்டளை சார்பாக “மகுடம்” விருதுகள் (2025) வழங்கும் விழா சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதையும் படியுங்க: Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…

தொழில் முனைவோர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், நாட்டுப்புற கலைஞர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சின்னத்திரை நட்சத்திரங்கள், சினிமா பிரபலங்கள், ஊடக நண்பர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட சாதனையாளர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

இவ் விருது வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை ரேகா, நடிகர் பவர் ஸ்டார், சின்னத்திரை நடிகர் டெலிபோன் ராஜ் ஆகியோர்கள் கலந்து கொண்டு இவ் விருதினை வழங்கினர்.

Power Star Against Vijay

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் பவர் ஸ்டார், 2026 தேர்தலில் நிற்பதற்கு ஒரு பெரிய கட்சிகள் என்னை கூப்பிட்டு இருக்கிறார்கள். நடிகர் விஜயை எதிர்த்து தான் நான் நிற்பேன் என்று கூறியுள்ளேன். அவருக்கு ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறவில்லை காலப்போக்கில் அது தெரிய வரும் என்று தெரிவித்தார்.

Actress Power star Says contest in Election against TVK Vijay

மேலும் பேசிய அவர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர் பண்பான மனிதர் கட்சியை நன்கு வளப்படுத்துவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

இப்பொழுது மூன்று படம் எனக்கு சூட்டிங் போயிட்டு இருக்கு. பெண்கள் குறித்து தவறான செய்தி வருவது ஒரு சிலர் செய்யும் தவறு அரசு மேல் குற்றம் சாட்டுகின்றார்கள் அதை களை எடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.என்று கூறினார்

  • ajith kumar next movie directed by sukumar அய்யோ; இது சுத்த பொய்- பதறிப்போய் ஓடி வந்த அஜித்தின் மேனேஜர்? அப்படி என்ன நடந்திருக்கும்?
  • Leave a Reply