#JusticeForSrimathi மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே ஒரு தமிழ் நடிகை…!தூக்கி வச்சு கொண்டாடும் ரசிகர்கள்..!
Author: Rajesh20 July 2022, 5:30 pm
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தவர் மாணவி ஸ்ரீமதி கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 3 நாட்களாக டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கூறி பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வந்தது.
இதன் மூலமாக நேற்று முன்தினம், மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு பல்வேறு அமைப்பினர் கனியாமூர் பகுதியில் திரண்டு போராட்டத்தில் குதித்தனர். ஒரு கட்டத்தில் இது பெரும் கலவரமாக வெடித்து, பள்ளிக்கு தீ வைத்தனர்.
மேலும் அங்கிருந்த பஸ்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். அப்போது மாணவ-மாணவிகளின் சான்றிதழ்களையும் தீ வைத்துக் கொளுத்தினர்.இதனால் பள்ளி வளாகம் போர்க்களமாக மாறியது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பொதுவாக தமிழகத்தில் நடைபெறும் சமூக பிரச்சனைகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை நடிகர் நடிகைகள் குரல் கொடுக்கும் வழக்கம் இருந்தது. குறிப்பாக சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்துறையால் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திக்கு பல திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் சமீபகாலமாக சமூக பிரச்சனை எழும்போது சினிமா நட்சத்திரங்கள் அமைதியாக இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவை அடுத்து மரணமடைந்த மாணவிக்காக குரல் கொடுத்த ஒரே தமிழ் நட்சத்திரம் என்று ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். நடிகையாவதற்கு முன்னர் பிரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக இருந்ததால் அவருக்கு சமூக அக்கறை இயல்பாகவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#justiceforsrimathi pic.twitter.com/QBuilRicDW
— Priya BhavaniShankar (@priya_Bshankar) July 18, 2022