மீண்டும் மிரட்டல் வில்லியாக மாறும் நீலாம்பரி.. “ரஜினி 169” புதிய அப்பேட் ..!

Author: Rajesh
26 April 2022, 4:09 pm

‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் வடிவேலு முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணனும் ஒப்பந்தமாகியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த, 1999 ஆம் ஆண்டு கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘படையப்பா’ படத்தில் ரஜினிக்கு மிரட்டல் வில்லியாக நடித்து வில்லாதி வில்லியாய் முன்னணி வில்லன் நடிகர்களுக்கே டப் ஃபைட் கொடுத்தார் ரம்யா கிருஷணன். ‘படையப்பா’ என்றாலே ரஜினிக்கு அடுத்து ரம்யா கிருஷ்ணன் தான் நினைவுக்கு வருவார். அந்தளவுக்கு, அவரின் நீலாம்பரி கதாபாத்திரத்தை அழுத்தமாக உருவாக்கியிருந்தார் கே.எஸ் ரவிக்குமார்.

இப்போதும், பல திரைப்படங்களின் வசனங்களிலும் மீம்ஸ்களிலும் ரம்யா கிருஷ்ணன் பேசிய ஒவ்வொரு வசனமும் தெறித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ‘படையப்பா’ படத்திற்குப்பிறகு ரம்யா கிருஷ்ணன் மீண்டும் ரஜினியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை மாதம் ‘ரஜினி 169’ படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • வாடி வாசலில் களமிறங்கிய இளம் நடிகை…லேட்டஸ்ட் தகவலால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!