உங்களுக்கு தான் திருஷ்டி சுத்தி போடனும்.. க்யூட்டான குட்டி பாப்பா ராஷ்மிகா : பழைய புகைப்படங்கள் வைரல்..!

Author: Rajesh
8 April 2022, 5:17 pm

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா. கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார்.

அவரது நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம், இந்திய அளவில் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. மேலும், சுமார் 280 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிய படம் வசூலில் சக்கை போடு போட்டது. அந்த படத்தில் இடம் பெற்றிருந்த ‘அய்யா சாமி வாயா சாமி’ என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பேய் ஹிட் அடித்தது.

தற்போது தென்னிந்திய சினிமாவைத் தாண்டி தற்போது இந்தி படங்களிலும் தடம் பதிக்கத் தொடங்கி விட்டார். அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடிக்க உள்ள அனிமல் படத்தில் தான் ராஷ்மிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். விஜய்யின் தளபதி66ல் ராஷ்மிகாவை நடிக்க நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரது சிறு வயது புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘உங்களுக்கு தான் திருஷ்டி சுத்தி போடனும்’ ‘க்யூட்டான குட்டி பாப்பா ராஷமிகா’ என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1451

    0

    0