உங்க உதடு வீங்க கோபியா காரணம்? பிக்பாஸ் பிரபலத்தின் கேள்வியால் அதிர்ந்து போன சீரியல் நடிகை ரேஷ்மா..!
Author: Rajesh29 July 2022, 11:16 am
ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் .
இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். நடிகர் பாபி சிம்ஹா இவரது உறவினர் .“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” படத்திற்கு பிறகு ரேஷ்மாவிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.
இதில் ராதிகாவாக நடித்து வரும் பிக்பாஸ் நடிகை ரேஷ்மா, சமீபத்தில் நடந்த ராஜு விட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது ராஜு, ரேஷ்மா பற்றிய ரசிகர்களின் மீம் புகைப்படங்களை படித்து காமிக்கிறார்.அதில், ராதிகா ஓவரா லிப்ஸ்டிக் போட்டு உதடு வீங்கிவிட்டதா என்று கேட்க, அதற்கு கோபி எதாவது பண்ணாரா ரேஷ்மா என்று ராஜு கலாய்த்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.