பண்டிட்டுகளை இஸ்லாமியர்கள் கொன்றதற்கு பழிக்கு பழியா…? நடிகை சாய்பல்லவி பேச்சுக்கு குவியும் எதிர்ப்பு..!!
Author: Babu Lakshmanan16 June 2022, 10:49 am
சென்னை : பண்டிட்களை இஸ்லாமியர்கள் கொலை செய்த சம்பவம் குறித்து நடிகர் சாய் பல்லவி கூறிய கருத்துக்களுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.
ஹைதராபாத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரபல நடிகை சாய் பல்லவி காஷ்மீர் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பண்டிட்டுகளை படுகொலை செய்தது பற்றி கூறப்பட்டுள்ளது. அன்றைய நாட்களில் காஷ்மீரி பண்டிட்கள் மீது இஸ்லாமியர்கள் எவ்வாறு தாக்குதல் நடத்தினார்கள் என்பது பற்றி அந்த படத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதன்பின்னர் கொரோனா ஊரடங்கு காலத்தில் இஸ்லாமியர்கள் வண்டி ஒன்றில் மாட்டுக்கறி எடுத்து சென்றபோது, அந்த வண்டியை மடக்கி பிடித்த சிலர், அந்த வண்டியை ஓட்டிய இஸ்லாமியரை ஜெய் ஸ்ரீராம் என்று கூற வைத்தனர். இது போன்ற செயல்கள் பலிக்கு பலி என்பது போல் உள்ளன.
அப்போது நடந்ததற்கும் இப்போது நடந்ததற்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. இதனால் அமைதி ஏற்படாது. நாம் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
நடிகை சாய்பல்லவியின் இந்த கருத்தை சிலர் வரவேற்று இருக்கும் நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டு வருகின்றனர்.