தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர். தமிழ் மொழியில் தெறி, மெர்சல், 24 போன்ற திரைப்படங்களில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலம் ஆனார்.
தெலுங்கிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரம் சமந்தா, நாக சைதன்யா காதல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். அதனைத் தொடர்ந்து, படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில் ஆட்டம் போட்டது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் ஆனது.
தற்போது, இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் கதீஜா கதாபாத்திரம் செம வைரல் ஆகி வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று சமந்தா தனது பிறந்தநாளை கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், விஜய் தேவரகொண்டா செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
ஏனு11 படத்தில் இருவரும் ஜோடியாக நடித்து வரும் நிலையில், படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது. இதையடுத்து போலியாக ஒரு காட்சியை எழுதி, அதெல்லாம் பொய் என்று தெரியாமல் நள்ளிரவு நிஜமாகவே நடித்துக் கொண்டிருந்தார் சமந்தா.
அதற்கு விஜய் தேவரகொண்டாவோ ஹேப்பி பர்த்டே சமந்தா என சொல்லவே, மொத்த படக்குழுவும் ஹேப்பி பர்த்டே சமந்தா என வாழ்த்தியது, கேக் வெட்டி கொண்டாடியது என சமந்தா கண் கலங்கிவிட்டார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.