பாலிவுட்னா என்ன பெரிய கொம்பா? நயன்தாராவுக்கு ஆதரவாக பேசிய சமந்தா : வைரலாகும் வீடியோ!!

Author: Rajesh
22 July 2022, 6:04 pm

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனனின் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, நீதானே எந்தன் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, தெறி, அஞ்சான், 24, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

தெலுங்கு மொழி திரையுலகிலும் அனைத்து முன்னணி தெலுங்கு நடிகர்களுடனும் நடித்துள்ளார். ஒரு சில படங்களில் ஒன்றாக நடித்ததன் மூலம் ஏற்பட்ட காதலால் நாகார்ஜுனா மற்றும் அமலா அவர்களின் மூத்த மகனான நடிகர் நாகசைதன்யா அவர்களை திருமணம் செய்து கொண்டார். 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள், ஸ்வீட் ஜோடியாக வலம் வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களுக்கு முன் இருவரும் சுமூகமாக பிரிந்து விட்டனர்.

இறுதியாக காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டாவின் குஷி, சகுந்தலம், யசோதா போன்ற படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட்டில் கரண் ஜோகர் தயாரிப்பில் அக்‌ஷய்குமார் நடிக்கும் ஒரு படத்தில் கமிட்டாகி இருக்கிறார் சமந்தா.

அதனால் பாலிவுட்டில் பிரபல நிகழ்ச்சியான கரண் ஜோகர் அவர்களின் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா, அக்‌ஷய் குமாருடன் கலந்து கொண்டுள்ளார். அப்போது தனது திருமண வாழ்க்கை, நடித்த திரைப்படங்கள், தன்னுடன் பணியாற்றிய பிரபலங்கள் என பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஆர்மேக்ஸ் ஸ்டார்ஸ் இந்தியா லவ்ஸ் பட்டியலில் சமந்தா முதல் இடத்தில் வந்தது பற்றி பேசியபோது, காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்தது குறித்து சமந்தா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நயன்தாரா ஒரு மிகச்சிறந்த நடிகை. அவருடன் நடித்து முடித்த கடைசி நாளில் இருவரும் கட்டியணைத்து அழுதோம் என நயன்தாராவை பெருமைப்படுத்தி பேசியுள்ளார்.

அதற்கு கரண், என்னுடைய லிஸ்ட்டில்(ஆர்மேக்ஸ்) அவர் இல்லை என்று நடிகை நயன்தாராவை பற்றி இயக்குனர் மற்றும் அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கரண் ஜோகர் கூறவே, அதற்கு சமந்தா, நாங்கள் காசு கொடுத்து தான் அந்த பட்டியலில் முதல் இடம் பிடித்தேன் என ஜாலியாக கூறினார்.

https://vimeo.com/732443330
  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?