கவர்ச்சி நடிகைக்கு வலைவிரித்த கும்பல் : அதிர்ந்து போன நடிகையின் பதிவு வைரல்..!

Author: Rajesh
12 April 2022, 4:16 pm

நடிகை ஷாலு ஷம்மு வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நடித்தன் மூலம், தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறினார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் ஷாலுவிற்கு வரத்தொடங்கியது. திருட்டு பயலே 2, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், இரண்டாம் குத்து மற்றும் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களில் குணச்சித்திர கதாபாத்திரம் ஏற்று நடித்தார் ஷாலு ஷம்மு.

கவர்ச்சியான சில கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ள ஷாலு ஷம்மு அவ்வப்போது பல அசத்தல் போட்டோஷூட்களை எடுத்து தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க சிலர் முயற்சி செய்வதாக புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேடஸ் ஒன்றை வைத்துள்ளார்.

அதில் ஒருவர், இவருடைய மேக்கப் கலைஞராக பணிபுரிந்த உமா கணக்கை பயன்படுத்தி கணக்கை முடக்க முயற்சி செய்தது தொடர்பான படங்களை பதிவிட்டுள்ளார்.

இந்த மாதிரியான ஹேக்கிங் முறை அவருக்கு தெரிந்து இருந்ததால் அவர் அதை செய்யாமல் இருந்துள்ளார். ஆகவே இதுபோன்று வரும் குறுஞ்செய்திகளை யாரும் நம்பி ஏமாந்துவிட கூடாது என்றும் அந்த ஸ்டேடஸில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் காவல்துறையில் புகார் அளிக்கவும் உள்ளதாக கூறியுள்ளார். அவரின் இந்தப் புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதிரியான குறுஞ்செய்திகளை பலர் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் க்ரைம் காவல்துறையும் எச்சரித்துள்ளது. மேலும் இதுபோன்ற நபர்கள் குறிப்பாக பிரபலங்களை குறிவைத்து தாக்குவதாக கூறப்படுகிறது. நடிகை ஷாலு ஷம்முவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 6.5 லட்சம் பேர் பின் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ