90’s காலகட்டங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடிச்ச ஹீரோயின் என்றால் அது நம்ம இடுப்பழகி சிம்ரன் தான். இன்று இலியானாவை எல்லோரும் இடுப்பழகி என்றுங்கூரலாம், ஆனா விதை சிம்ரன் போட்டது. தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி என இவர் தமிழில் VIP என்ற படத்தில் பிரபுதேவா ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என எல்லோருடனும் நடித்துள்ளார். இவர் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், வாலி, ஜோடி, பிரியமானவளே, பஞ்சதந்திரம், படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியான சமயத்தில் சிம்ரன் அளித்த பேட்டி ஒன்றில் ஆரம்ப நாட்களில் தான் கிளாமராக நடித்தது குறித்து மனம் திறந்திருக்கிறார்.
நான் எப்போதும் கிளாமரை விட வேண்டும் நினைத்தது இல்லை. கிளாமர் என்பது அதீத கவர்ச்சி என்பதல்ல. நீங்க உங்க குடும்பத்தோட அமர்ந்து பார்ப்பது போல இருக்கனும். கிளாமர் க்யூட்டா இருக்கும் . அதீத கவர்ச்சி வல்கரா இருக்கும். நான் நடிக்க வந்த சமயத்தில் கிளாமராக உடை அணிந்திருக்கிறேன். ஏன்னா சினிமா துறையினர் உங்களை அந்த மாதிரியான ஆடைகள் அணிய கட்டாயப்படுத்துவாங்க.
ரசிகர்களும் அதைத்தான் விரும்புவாங்க. அதெல்லாம் கெரியரின் ஆரம்ப நாட்களில் மட்டும்தான். கொஞ்சம் கொஞ்சமா நான் பர்ஃபாமென்ஸுக்குள்ள வந்துட்டேன். நான் நடிக்க வந்த ஆரம்ப காலக்கட்டத்துல நிறைய கஷ்டப்பட்டேன். அது என்னால மறக்க முடியாது. எப்போதுமே போராட்டங்கள்தான் நமக்கு வாழ்க்கையுடைய அருமையை உணர்த்தும். ‘ என்றார் சிம்ரன்.
1
2