அம்மாவின் அந்த பழக்கத்தை follow பண்ணும் ஜான்வி கபூர்.. ! ஏன் தெரியுமா?

Author: Rajesh
19 July 2022, 1:56 pm

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது கணவர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகி நடித்து வருகிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஜான்வி கபூர், அவர் நடிப்பில் குட் லக் ஜெரி என்ற திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இப்படம் தமிழில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ஹிட்டான கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகை ஜான்வி “என் ஒவ்வொரு படத்தின் ஸ்க்ரிப்ட்டையும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு எடுத்துச் செல்வது என் வழக்கம். இதனால் எனக்கு நல்லது நடக்கிறது என்பது எனது நம்பிக்கை. என் அம்மா திரையுலகில் நடித்துக்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு ஆண்டும் அவருடைய பிறந்தநாளுக்கு திருப்பதி கோயிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் திருமணம் முடிந்த பிறகு, அதை ஏனோ நிறுத்திவிட்டார்.

அம்மாவின் பிறந்தநாள் அன்று நான் திருப்பதி கோயிலுக்கு செல்ல வேண்டுமென்று எனது உள் மனது சொன்னது. இதையடுத்து ஆண்டுதோறும் அம்மாவின் பிறந்தநாளுக்கு திருப்பதிக்கு செல்கிறேன். மேலும் புத்தாண்டுக்கும் திருப்பதி கோவிலுக்குதான் செல்வேன்” என கூறியுள்ளார்.

  • goundamani is the only actor who called rajinikanth without respect ரஜினியை வாடா என்று அழைத்த ஒரே காமெடி நடிகர்? அந்த அளவுக்கு கெத்தா இவரு?
  • Close menu