‘இப்படி ஆபாசமாவா பேசுவீங்க..? இனி உங்க கூட நடிக்கவே மாட்டேன்’ ; லியோ பட நடிகரை விளாசித் தள்ளிய நடிகை த்ரிஷா…!!

Author: Babu Lakshmanan
18 November 2023, 10:04 pm

அண்மையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்ட படம் தான் லியோ. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். மேலும், மன்சூர் அலிகானும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், தனியார் சேனலுக்கு பேட்டியளித்த நடிகர் மன்சூர் அலிகானின் பேச்சு கடும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. அதாவது, ” இப்ப எல்லாம் கற்பழிக்க விடுவதே இல்லை. எனக்கும் ரொம்பவே ஆசையா இருந்துச்சு. லியோ படத்தில் நடிகை த்ரிஷாவுடன் நடிக்கும் போது, பெட்ரூம் சீன் இருக்கும். குஷ்பு, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டதைப் போன்று போடலாம். 150 படத்தில் நம்ம பண்ணாத ரேப்பா..? வில்லனாகவே போட மாட்டீறாங்க. நம்ம பண்ணாத அட்டூழியம்.
ஆனால், லியோ படத்தில் த்ரிஷாவை கண்ணுலயே காட்டவில்லை, என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவரது இந்தப் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் X தளத்தில் விடுத்திருந்த பதிவில், சமூக வலைதளங்களில் மன்சூர் அலிகான் பேசிய வீடியோவை பார்த்தேன். அவரது இந்த மரியாதை குறைவான, ஆபாசப் பேச்சுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்கிறேன், அவர் தொடர்ந்து ஆசைப்படுகிறார்.

ஆனால், இனி அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன். இதுபோன்ற நபர்களால் மனிதகுலத்திற்கே அவமானம், என ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.

  • Dhanush Idli Kadai first look poster கையில் தூக்கு வாளி…கழுத்தில் துண்டு…புத்தாண்டு விருந்து அளித்த இட்லி கடை..!
  • Views: - 365

    0

    0