என்ன யோக்கியதை இருக்கு.. சீமானை மீண்டும் வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி!

Author: Hariharasudhan
12 November 2024, 5:13 pm

கடந்த சில மாதங்களில் 50,000 ருபாயைக் கொடுத்துவிட்டு வீடியோ கேட்டு சீமான் டார்ச்சர் செய்ததாக நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தன்னுடன் பழகியதாகவும், ஏமாற்றியதாகவும் எனக் கூறி சீமானின் தம்பிகளையே கதிகலங்க வைத்தார் என்றே கூறலாம். இந்த நிலையில், நேற்று ஒரு வீடியோவை வெளியிட்ட நடிகை விஜயலட்சுமி, மிகவும் ஆக்ரோஷமான வார்த்தைகளால் சீமானை கேள்விக்கு மேல் கேள்வி கேட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் பேசிய விஜயலட்சுமி, “வந்தாச்சு, மீண்டும் Mr.சீமான். மிகவும் உத்தமர் மாதிரி தமிழ் தேசியம் பற்றி கதைகளைப் பேசிவிட்டு, நான் ரொம்ப நல்ல தமிழ் அப்பா, அம்மாவுக்கு பிறந்தவன் எனக் கூறி உள்ளார் சீமான். அப்படி என்றால், நான் என்ன இந்தி அப்பா, அம்மாவுக்கு பிறந்தவளா? நானும் தமிழ் அப்பா, அம்மாவுக்கு பிறந்தவள் தான். ஒன்றும் இல்லை மிஸ்டர் சீமான்.

அடுத்ததாக என்னை முதலமைச்சர் ஆக்குங்க என்று சொன்னீர்களே, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் கிளாரிட்டி (தெளிவு) கொடுங்கள். அதன்பிறகு உங்களை முதலமைச்சர் ஆக்கலாமா, வேண்டாமா என்று அவர்கள் முடிவு செய்வார்கள்.

கடந்த ஆண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என்னுடைய வங்கிக் கணக்கில் 50 ஆயிரம் ரூபாய் போட்டுவிட்டு, இது கயல்விழிக்கு தெரியக்கூ டாது, நாம் தமிழர் கட்சியினருக்கு தெரியக்கூடாது, ஊடகங்களுக்கு தெரியக்கூடாது, ஏன், தமிழ்நாட்டு மக்கள் யாருக்கும் தெரியக்கூடாது என என்னிடம் சத்தியம் வாங்கிவிட்டு, இரவும் பகலுமாக என்னிடம் வீடியோ வாங்க தொந்தரவு செய்தீர்களே.

அதையெல்லாம் தாங்க முடியாமல் தான் நான் வழக்கு கொடுத்தேன். அவை அனைத்தையும் மறைத்துவிட்டு, என் பெயரைக் கெடுக்க திமுக விஜயலட்சுமியை கூட்டி வந்திருக்கிறது என பச்சைப் பொய் சொன்னீர்களே? அவ்வளவுதானா உங்கள் யோக்கியதை? வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்கு உங்களிடம் வீட்டு வேலைக்கு வந்த மதுரை செல்வம், எனக்கு 1 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறாராம்.

Seeman

அதை என்னவென்று கேட்காமல், ஏதோ வாபஸ் கொடுத்துவிட்டு போய்விட்டாள் என நினைத்து, உங்கள் மனைவி முன்பு நின்று, ‘பழக்கத்திற்கு இவள் தான் கிடைத்தாளா என எனது மனைவி கேட்டாள்’ எனக் கூறி சிரிப்பது தானா உங்கள் யோக்கியதை இதையெல்லாம் பார்த்த பிறகும் தமிழ்நாட்டு மக்கள் உங்களை முதலமைச்சர் ஆக்கப் போகிறார்களா?

இதையும் படிங்க: ஒட்டுமொத்த தமிழகத்துக்கே அவமானம்.. போலீசாரை வறுத்தெடுத்த அன்புமணி!

உங்களுக்கு உண்மை பேசும் யோக்கியதையே கிடையாது. உங்களைப் போன்ற துரோகிகள் கையில் தமிழ்நாடு எப்போதும் சிக்கவே சிக்காது. அப்படி சிக்குவதற்க்கு தமிழ் உணர்வாளர்கள் யாரும் உங்களை விடவும் மாட்டார்கள். சரியா, எனவே, உங்கள் முதலமைச்சர் கனவை இத்தோடு விட்டுவிடுங்கள். என் கண்ணீர் உங்களை சும்மாவே விடாது. அதேபோல் என்னுடைய அக்கா கண்ணீர் உங்களை என்றைக்கும் சும்மா விடாது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி சீரழித்து விட்டதாக நடிகை விஜயலட்சுமி திடீரென பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், இந்தப் புகார் தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், திடீரென வழக்கை வாபஸ் பெற்று விஜயலட்சுமி பெங்களூருக்குச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!