புகாராளிக்க வந்த பெண் மீது மின் மீட்டரை தூக்கி எறிந்த போதை மின் வாரிய ஊழியர் : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2022, 11:40 am

பாலக்கோட்டில் மின்வாரிய அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்த பெண் மீது மது போதையில் பாக்க முயன்ற வணிக விற்பனையாளர் பணி இடை நீக்கம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி தீர்த்தகிரி நகரை சேர்ந்த பெண்மனி ஒருவர் இன்று மாலை பாலக்கோடு மின்வாரிய அலுவலகத்திற்க்கு வந்து தன்னுடைய வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நேரமாக மின்சாரம் வரவில்லை என புகார் தெரிவித்துள்ளார்.

அப்போது பணியில் உதவி மின் பொறியாளர் இல்லாததால் பணியில் இருந்த வணிக விற்பனையாளர் குப்புராஜ் சரி செய்து தருவதாக பெண்மணியிடம் கூறிவிட்டு அலுவலகம் உள்ளே சென்று அமர்ந்தார்.

அப்போது பெண்மணியின் உடன் வந்தவர்கள் குப்புராஜை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் ஆத்திரமடைந்த குப்புராஜ் மின் மீட்டரை அவர்கள் மீது கோபத்துடன் வீசினார்.

இதனை செல்போனில் படம் பிடித்தவர்கள் சமூக வலைதளங்களில் பரவ விட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது இது குறித்து விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.

பணியின் போது அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வந்த பொதுமக்களிடம் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டத்துடன் மின் மீட்டரை கொண்டு தாக்கியதாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் தற்போது பணி இடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 601

    0

    0