கோவை கரடிமடையில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை கரடிமடையில் சமீபத்தில் அதிமுகவை சேர்ந்த செல்வராஜ் திமுகவினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தார் அவரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நிவாரணம் வழங்கிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், கோவையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் கள்ளச்சாரயம் விற்பனை நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
குறிப்பாக கோவை கரடிமடையில் உள்ள அதிமுகவை சேர்ந்த செல்வராஜ், டாஸ்மாக்கில் மது கூடுதலாக விற்பனை செய்வதை கேள்வி கேட்டதற்காக, அந்த டாஸ்மாக் நடத்தும் திமுகவை சேர்ந்த ராகுல் ,கோகுல் என்பவர் தாக்கி அவர் பலியாகியுள்ளார்.
இவ்வளவு தைரியாமாக இந்த கொலையை நிகழ்த்தியுள்ளதாகவும் இந்த கொலை சம்பவத்தில் கொலையாளிகளுக்கு ஆதரவாக போலீஸ் துணையாக உள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கோவையில் கள்ளதனமாக மதுவிற்பனையை தடுக்காத காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அதிமுகவினர் போராடுவோம் என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி,
ஜனநாயக நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும்,
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சட்டமன்றத்தில் அதிமுகவினர் தனிதீர்மானம் கொண்டுவருவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…
ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…
சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…
அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…
கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…
இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…
This website uses cookies.