ஒரு மக்கு அரசாக தமிழகத்தில் திமுக அரசின் ஆட்சி… செவிடன் காதில் சங்கு ஊதியது போல… அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை கடும் விமர்சனம்…!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 4:47 pm

காவேரி நீர் உரிமையை பறிகொடுத்து விட்டு அலட்சியமாக ஒரு மக்கு அரசாக தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி செய்து வருவதாக அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை விமர்சனம் செய்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் சேதுராமன் தலைமையில் , வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை மற்றும் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டத்துறை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டார். அதிமுகவை சூறையாட நினைத்த துரோகிகள், எதிரிகளிடமிருந்து கட்சியை மீட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம், மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க அயராது பாடுபட வேண்டும், அதிமுகவிற்கு எதிராக பொய் வழக்கு போட்டு , அதிமுகவை முடக்க நினைக்கும் பாசிச திமுகவிற்கு கண்டனம்,

வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நீதிமன்ற வழக்குகளில் இருந்து குறுக்கு வழியில் விடுதலை பெற நினைக்கும் தண்டனை பெற்றுத்தரும் முயற்சியில் அதிமுக வழக்கறிஞர் அணி ஈடுபட வேண்டும், அதிமுக அரசு பெற்றுத்தந்த விவசாயிகளுக்கான உரிமையை நிலைநாட்ட தவறிய, திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறோம் உள்ளிட்ட 5 தீர்மானங்கள் அதிமுக வழக்கறிஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கூறியதாவது :- அதிமுக எடப்பாடி தலைமையில் சிறப்பாக இயங்கி வருவதை முன்னிறுத்தும் வகையில் இன்றைக்கு அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் மற்றும் முல்லை பெரியார் அணை ஆகிய உரிமைகளை சட்டரீதியாக பெற்றுக் கொடுத்தவர் அண்ணா தான், பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் பெற்று தந்தது அதிமுக தான்.

ஆனால், காவேரி நீர் உரிமையை பறிகொடுத்து விட்டு அலட்சியமாக ஒரு மக்கு அரசாக தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. காவிரி விவகாரத்தில் உரிய நேரத்திற்குள் புகார் அளிக்காமல் உரிய நேரத்திற்குள் புகாரினை உச்சநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாமல் இருந்ததனால் திமுக அரசை கண்டிக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் எதேச்சை அதிகாரப் போக்கில் காவல்துறையினர் இருக்கின்றனர்.

உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளை அளித்துள்ளது. அதில் ஏழு வருடங்களுக்கு குறைவாக தண்டனை கொண்டவர்களை கைது செய்யும்போது 41a நோட்டீஸ் வழங்க வேண்டும் என அருணேஷ்குமார் சத்தியேந்திரகுமார் வழக்கிலும் நீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால், யாரை வேண்டுமானாலும் இரவோடு இரவு கைது செய்துவிடலாம் என தமிழக காவல்துறை இருக்கின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக ஐடி பிரிவின் செயலாளர் அருண்குமாரை காவல்துறை ஒரு தீவிரவாதியை கைது செய்வது போல் கைது செய்தனர். குற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு அக்கறை காட்ட வேண்டிய காவல்துறையினர் எதிர்க்கட்சியினை தாக்குவதில் மட்டுமே அக்கறை காட்டி வருகின்றனர்.

கட்டப் பஞ்சாயத்துகளும், நில அபகரிப்புகளும் பல்வேறு நடைபெறுகின்றன. இது தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எங்களுக்கு ஏதேனும் புகார்கள் வந்தால் அதை அதிமுக சார்பில் சட்டரீதியாக துணையாக இருப்போம் என தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம். தலைமை நீதிபதி செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிக்க வேண்டும், மக்கள் வரிப்பணத்தை வீணாக்க அவசியம் என்ன..? என தீர்ப்பளித்தும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் திமுக அரசு செயல்பட்டு வருகிறது, எனக் கூறினார்.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 330

    0

    0