நாடாளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகும் அதிமுக… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ் ; தயாராகும் நிர்வாகிகள்..!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 12:45 pm

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலுக்கான குழுக்களை அமைத்து அதிமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரிரு மாதங்களே உள்ள நிலையில், அடுத்த மாத இறுதியில் தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளும் தேர்தல் குழுக்களை அமைத்து வருகின்றன.

அந்தவகையில், நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை மேற்கொள்ள அதிமுக சார்பில் குழுக்களை அமைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, தொகுதிப் பங்கீட்டுக் குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் பிரசாரக் குழு, தேர்தல் விளம்பரக் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தொகுதிப் பங்கீட்டு குழுவில் இடம்பெற்றவர்களின் விபரம் ; முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி மற்றும் பென்ஜமின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம்பெற்றவர்களின் விபரம் ; முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், பொன்னையன், டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செ.செம்மலை, பா.வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார், வைகைச்செல்வன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் பிரச்சாரக் குழுவில் இடம்பெற்றவர்களின் விபரம் ; தம்பிதுரை எம்.பி., செங்கோட்டையன், என்.தளவாய்சுந்தரம், செல்லூர் ராஜூ, தனபால், கே.பி.அன்பழகன், காமராஜ், கோகுல இந்திரா, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், என்.ஆர்.சிவபதி.

தேர்தல் விளம்பரக் குழுவில் இடம்பெற்றவர்களின் விபரம் ; சி.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜேந்திரபாலாஜி, அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, பி.வேணுகோபால், வி.பி.பி. பரமசிவம், ஐ.எஸ்.இன்பதுரை, எஸ். அப்துல் ரஹீம், வி.வி.ஆர். ராஜ் சத்யன், வி.எம்.ராஜலெட்சுமி, ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  • Rashmika Mandanna injury update வீல் சேரில் பரிதாபமாக வந்த நடிகை ராஷ்மிகா…பீலிங்ஸ் ஆன ரசிகர்கள்…!