அதிமுக ஆட்சியில் கூட இல்ல… திமுக ஆட்சியில் இப்படியா..? அழியும் இயற்கை வளம் ; தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வேதனை..!!

Author: Babu Lakshmanan
12 May 2023, 8:04 pm

கடந்த அதிமுக ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது திமுக ஆட்சியில் தாராளமாக ஏராளமாக மணல் அள்ளி இயற்கை சூழல் பாதிக்கப்பட்டு வருவதாக கரூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கரூரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் பேசியதாவது :- ஆடியோ விவகாரம் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் துறை மாற்றப்பட்டுள்ளதாக விமர்சனம் செய்தார். கடந்த அதிமுக ஆட்சியில் மணல் அள்ளுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்தது. மணலுக்கு மாற்றாக எம் சாண்ட், பீ சாண்ட என்று இருந்தது. தற்பொழுது திமுக ஆட்சியில் தாராளமாக, ஏராளமாக மணல் அள்ளி இயற்கை சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு முற்றிலுமாக இந்த அரசு திமுக தடை விதிக்க வேண்டும். இந்த மக்கள் விரோத அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கீழ்பவானி பாசன கால்வாய் திட்டத்தில் கான்கிரீட் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். 8 டிஎம்சி அளவு தண்ணீர் மட்டுமே வெளியேற்ற வேண்டும் என்ற நிலையை மீறி, 24 முதல் 30 டிஎம்சி தண்ணீர் விடுகிறார்கள், அந்த நீரானது வீணாக வெளியேற்றப்பட்டு வருவதை நிறுத்த வேண்டும். காவிரி மேலாண்மை தீர்ப்பை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் அனைத்து பழங்களிலும் இரசாயனம் போட்டு பழுக்க வைக்கும் செயலை தடுக்க வேண்டும். கலப்படம் செய்து பழங்கள் விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 418

    0

    0