காரை மறித்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்ட இஸ்லாமியர்கள்… திமுக வேட்பாளர் ஆ.ராசா கொடுத்த ரியாக்ஷன்..!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 12:16 pm

கோவை – மேட்டுப்பாளையத்தில் பள்ளி வாசல் முன்பு வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்த அதிமுகவினர், அங்கு வந்த திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் உள்ள கொத்துவா பள்ளி வாசலில் இன்று ரமலான் பண்டிகையை ஒட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் தொழுகை முடித்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் படிக்க: ICU-வில் இந்திய ஜனநாயகம்… தமிழகத்தில் மோடி முகாம் போட்டாலும் ஒன்னும் வேலைக்காகாது ; கி.வீரமணி..!!!

அந்த சமயம் அந்த வழியாக நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா காரில் வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள், ‘போடுங்க அம்மா ஓட்டு இரட்டை இலையை பார்த்து..’ என கோஷமிட்டனர்.

இதனை கண்ட ஆ.ராசா, வாகனத்தை நிறுத்தி அதிமுக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் கை கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், அதிமுக நிர்வாகிகள் அவருக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்க அவரிடம் வாக்கு கேட்டு நோட்டீஸ் வழங்கினர்.

அதனை வாங்கி கொண்டு கை கொடுத்த ஆ.ராசா, ‘பாஜகவை மட்டும் உள்ளே விட்டுறாதீங்க’.. எனக் கூறி விட்டு அங்கு இருந்து கிளம்பினார்.

இதனிடையே, ராசா பேசி கொண்டு இருந்த போது, திமுக தொண்டர் ஒருவர் அதிமுகவினர் கோஷம் எழுப்பிய போது எதிர் கோஷம் எழுப்பினார். இதனால் சற்று நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 341

    0

    0