தென்காசி ; செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் நகர் மன்ற தலைவியும், அதிமுக பெண் கவுன்சிலரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகராட்சியில் நகர திட்டக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. செங்கோட்டை நகராட்சியில் 24 வார்டுகள் உள்ள சூழலில் நகர் மன்ற தலைவியாக உள்ள ராமலக்ஷ்மி என்பவர் சுயேட்சையாக வெற்றி பெற்று முதலில் அதிமுக மற்றும் பாஜகவினர் ஆதரவுடன் சேர்மனாக பதவியேற்றார்.
இந்நிலையில், கடந்த மாதம் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். இந்த சம்பவம் செங்கோட்டை நகர பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த நாள் முதல் இதுவரை நகர்மன்ற கூட்டம் நடத்தவில்லை என கூறப்படுகிறது.
மேலும், கூட்டம் தொடங்கிய உடன் மெஜாரிட்டி இல்லாத ஒரு தலைவர் தற்போது உள்ளார் என கூறி அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டு கூட்டத்தை புறக்கணிப்பு செய்து வெளியேறினார்.
தொடர்ந்து, நகர மன்ற தலைவியின் அறைக்குள் சென்று அதிமுக மற்றும் பாஜக கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பிரச்சனையில் ஈடுபட்ட நிலையில், அதிமுக 3-வது வார்டு கவுன்சிலரான சுடர்ஒளி என்பவரை செருப்பால் அடிப்பேன் என சேர்மன் கூறியதாக கூறப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, சேர்மன் மற்றும் 3வது வார்டு கவுன்சிலர் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நகர்மன்ற கூட்டத்தில் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கும்பமேளாவில் ருத்ராட்சை மாலை விற்றுக்கொண்டிருந்தவர் மோனாலிசா. இவரது புகைப்படம் இணையத்தில் படுவைலரானது. காரணம் பார்ப்பதற்கு நடிகை போலவும், கண்கள் பலரையும்…
மகனை இழந்த இமயம்… இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜா கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி…
கலவையான விமர்சனம் சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் அமின்பூரில் உள்ள உள்ளூர் ராகவேந்திரா நகர் காலனியில் வசிக்கும் சென்னைய்யா ( 55 )…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த புறத்தாக்குடியில் புனித சேவியர் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில்…
This website uses cookies.