‘நம்ம குழந்தைகளா இருந்தா விடுவோமா..? அரசுப் பள்ளிக்கு அடிப்படை வசதி கோரி அதிமுக கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம்..!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 11:35 am

கோவை : கோவை மாநகராட்சி கலந்தாய்வு கூட்டத்தில் அதிமுகவு கவுன்சிலர் ஒருவர் திடீரென தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டு பேசி வருகின்றனர்.

இந்த நிலையில், 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், ஆய்வுக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

அப்போது, கோவை மாநகராட்சிக்குட்பட்ட இரத்தினபுரி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் மேஜை இருக்கை, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லை என்றும், மாணவர்கள் தரையில் அமர்ந்து பாடத்தை கவனித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

எனவே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

  • good bad ugly movie collected 200 crores in 9 days ஒன்பதே நாள்ல வேற லெவல் கலெக்சன்; AKனா சும்மாவா? குட் பேட் அக்லி கல்லா கட்டிய விவரம்…